கலிபோர்னியாவில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயினால் பூனைகளுக்கு ரத்தம் உறையும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வனவிலங்குகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. மேலும், பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் கருகி காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில், கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், காட்டுத்தீயினால் பூனைகளுக்கு ரத்தம் உறையும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.