சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்க ராகுல் அறிவுரை

வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று, அதன் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தி இருக்கிறார்.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு ஆறு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் தங்களுடைய வெற்றி வாய்ப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. அதன் அடிப்படையில் கூட்டணி கட்சியான திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகிகளிடம் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். இதில், தேர்தல் வெற்றி வாய்ப்புகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, நிர்வாகிகளிடம் ராகுல் கருத்துக்களை கேட்டறிந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியானது தமிழகத்தில் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லை; எனினும், வலிமையான கட்சியாகவே காங்கிரஸ் உள்ளது.

வரும் சட்டசபைத் தேர்தலில் கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலம் கட்சி மேலும் வலுப்பெறும். வரும் தேர்தலில் காங்கிரஸ் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கான வெற்றி பிரகாசமாக உள்ளது என்று, ராகுல்காந்தி பேசினார்.

Translate »
error: Content is protected !!