தேனி மாவட்டம் பெரியகுளம் தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகரம் சார்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் மற்றும் புதிய வாக்காளர்களை அதிக அளவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேர்ப்பது புதிய வார்டு செயலாளர்கள் நியமனம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் நல்லசாமி தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் நகரச் செயலாளர் சந்தானம் மாவட்ட பொருளாளர் பெரிய வீரன் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி வடக்கு ஒன்றிய செயலாளர் குள்ளபுரம் கணேசன் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் லக்கி சலீம்மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குபேந்திரன் மாவட்ட பிரதிநிதி செல்லப்பாண்டி சேகர் ஒன்றிய மாணவரணி செயலாளர் சசி இலக்கிய அணி செயலாளர் ராஜசேகர்மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்