தேனி அரசு கட்டுமான பணிகளை துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி அரசு கால்நடை கல்லூரி அரசு சட்டக் கல்லூரி அம்மா திருமண மண்டபம் கட்டட கட்டுமானப்பணிகள் தொடர்பாகவும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் தேனி மாவட்டம், தேனி வட்டத்திற்குட்பட்ட தாடிச்சேரி கிராமத்தில் ரூ.82 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டப்படவுள்ள பகுதியினையும் மற்றும் தப்புக்குண்டு கிராமத்தில் ரூ.89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு சட்டக்கல்லூரி கட்டட கட்டுமானப்பணிகள் குறித்தும், போடேந்திரபுரம் விலக்கு அருகில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அம்மா திருமண மண்டபம் கட்டட கட்டுமானப்பணிகள் தொடர்பாகவும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊராட்சித்தலைவா க.ப்ரிதா, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தியாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.திலகவதி, பெரியகுளம் சார் ஆட்சியர் டி.சிநேகா, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர்(பொ) இரா.நிறைமதி, சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!