தேனியில் கடைகளை அடைக்க கோரி திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் ? ஏன் ?

துணை முதலவர் ஊரில் விவசாயிகளுக்கு எதிரான சட்டமசோதாவினை எதிர்த்து கடைகளை அடைக்க கூறி போராடிய திமுக கூட்டனி கட்சியினரை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து – தங்கதமிழ்செலவன் பேட்டி.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு திரட்டும் வகையிலும், புதிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் எதிர் கட்சிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று  திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பெரியகுளம் தென்கரை கடை வீதி பகுதியில் திறந்திருந்த கடைகளை இன்று ஒரு நாள் விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகளை அடைக்கும்படி வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.
தொடர்ந்து திறந்து இருந்த கடைகளை அடைக்க கோரி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கையா தலைமையில் வந்த கட்சியினரை காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த திமுகவின் தேனி மாவட்ட செயளாலர் தங்க தமிழ்செல்வன் விவசாயிகளுக்கு தமிழகம் முழுவது எதிர்கட்சிகள் மற்றும் விவசாயிகள் பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் காவல்துறையினர் யாரையும் கைது செய்யாமல் உள்ள நிலையில் தமிழக துணை முதலவரின் சொந்த ஊர் எனப்தால்  ஒபிஎஸ் உத்தரவின் பேரில் கைது நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளது கண்டிக்க தக்கதாகவும், சென்னை – சேலம் 8வழி சாலை குறித்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற தொடர்ந்து தடை விதித்துள்ளது குறித்த கேட்ட போது விவசாயிகள் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை 8 வழிச்சாலை வேண்டாம் எனபதே, மேலும் 3 மாதங்களில் 8 வழிச்சாலையை நிறைவேற்ற முடியாது, வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதலவராக பொறுப்பேற்ற உடன் 8 வழிச்சாலை திட்டம் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டு விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
Translate »
error: Content is protected !!