திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட மர்ம நபரால் பரபரப்பு – சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை உள்ளது. அப்போது பராமரிப்பு பணிக்காக அங்கு வந்த நபர்கள் சிலையின் தலையில் காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்டு போடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து அதிமுகவினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன், ஜவகர் துண்டை அப்புறப்படுத்தியதுடன் இது குறித்து செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திருச்சியின் முக்கிய பகுதியில் பட்டப்பகலில் எம்ஜிஆர் சிலைக்கு முக்காடு போட்டு சென்றதால் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சம்பவ இடத்திற்கு வந்து சிலைகளை தண்ணீரால் சுத்தம் செய்து பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது இன்று காலை 11 மணியளவில் யாரோ மர்ம நபர் காங்கிரஸ் துண்டை தலையில் போட்டு விட்டுச் சென்றுள்ள யார் அவர் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் என தகவல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெல்லமண்டி நடராஜன் …..

இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணைக்கு பிறகு சிலையை சுற்றி கம்பிவேலி அமைக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

Translate »
error: Content is protected !!