சாருஹாசன் பெயரையோ சுஹாசினி பெயரையோ பயன்படுத்தினால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்பதால் கமல் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துகிறார் – கே.என்.நேரு பேட்டி.
அ.தி.மு.க வை நிராகறிக்கிறோம் என்கிற தலைப்பில் தி.மு.க சார்பில் கிராம சபை கூட்டம் இன்று நடைப்பெற்றது.திருச்சி மாவட்டம் உறையூர் குறத்தெருவில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நேரு, அமைச்சர்கள் மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லையென்றால் அதை ஆளுநரிடம் கூற முடியாது.தி.மு.க வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளிலிருந்து நிரபராதி என ஒவ்வொரு வழக்குகளிலிருந்தும் தி.மு.க வெளியே வந்து கொண்டு இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் எந்த மாநிலத்திலும் பத்தாண்டுகளாக எந்த அமைச்சரும் ஒரே இலாக்காவில் பதவி வகித்தது கிடையாது.தமிழ்நாட்டில் மட்டும் தான் அவ்வாறு இருக்கிறார்கள். அந்த அமைச்சர்கள் செய்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் செல்வதற்கு முன்பாக ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்.
தி.மு.க வினர் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.அதை யாராலும் தடுக்க முடியாது. தி.மு.க வின் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாததால் பா.ம.க வினர் தயாநிதி மாறன் கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.தேர்தல் நேரத்தில் இது போன்ற இடையூறுகள் வர தான் செய்யும்.
தமிழக அரசு மினி கிளினிக்குகளை தேர்தலுக்காக தான் திறந்துள்ளார்கள். பொங்கல் பரிசாக 2500 ரூபாய் தமிழக அரசு வழங்குவது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அ.தி.மு.க வினர் நினைக்கிறார்கள். ஆனால் அது எந்த வித தாக்கத்தையும் தேர்தலில் ஏற்படுத்தாது.தி.மு.க பக்கம் தான் மக்கள் நிற்கிறார்கள்.
கிராம சபை கூட்டங்களில் எங்கள் மீது மக்கள் எந்த குறையும் கூறவில்லை, நீங்கள் ஆட்சிக்கு வந்த உடன் தங்களுக்கு தேவையானதை செய்யுங்கள் என தான் கூறுகிறார்கள். கமல்ஹாசன் தன் அண்ணன் சாருஹாசன் பெயரையோ நடிகை சுஹாசினி பெயரையோ கூறினால் யாரும் அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள். அதனால் தான் அவர் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துகிறார் என கூறினார்