மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் திருச்சியில் மூன்றாம் கட்ட பிரச்சாரம் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் மதுரை மாவட்டத்தில் முதல் கட்ட பரப்புரை செய்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாவது கட்ட பரப்புரை செய்த இன்று திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் சென்றடைந்தார்.
மதுரையிலிருந்து திருச்சி விமான நிலையம் அருகே மொராய்சிட்டி (தனியார்) இடத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினர். பின்னர் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கேகே நகர், சுந்தர் நகர், சுப்ரமணியபுரம் பகுதிகளில் பரப்புரை செய்து பின்னர் எஸ்ஆர்எம் ஹோட்டலுக்கு செல்கிறார்.
தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் பகுதியில் 4.30 மணி அளவில் வணிக ரீதியான சந்திப்பு ரம்யா நடைபெறுகிறது அங்கு கமலஹாசன் பேச உள்ளார். தொடர்ந்து காந்தி மார்க்கெட், சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், டோல்கேட், பால்பண்ணை, திருவரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை செய்கிறார்.
தொடர்ந்து திருச்சி தலைமை அலுவலகத்தில் மக்களை சந்தித்து நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து காட்டூரில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவது அங்கு பேச உள்ளார். கமலுடன் அவரது மகள் அக்சரா ஹாசனும் வந்துள்ளார். எஸ்ஆர்எம் ஹோட்டலுக்கு வந்த கமலஹாசனை தொண்டர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் எஸ்ஆர்எம் நுழைவாயில் கண்ணாடி கதவு உடைந்தது.
கமலஹாசன் மதுரை மாவட்டத்தில் முதல் கட்ட பரப்புரை செய்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாவது கட்ட பரப்புரை செய்த இன்று திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் சென்றடைந்தார். மதுரையிலிருந்து திருச்சி விமான நிலையம் அருகே மொராய்சிட்டி (தனியார்) இடத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினர்.
பின்னர் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கேகே நகர், சுந்தர் நகர், சுப்ரமணியபுரம் பகுதிகளில் பொதுமக்களை பார்த்து கை அசைத்து சென்று பின்னர் எஸ்ஆர்எம் ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்திவிட்டு ஓய்வெடுத்தார்.
பின்னர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மக்களை பார்த்து கையசைத்து பின்பு வணிக ரீதியான சந்திப்பு ஹோட்டல் ரம்யாசில் நடைபெற்றது. அங்கு பேசிய கமலஹாசன்… முழு நேரம் அரசியல் குறித்து முழு நேரம் யாரும் எதையும் கிழிப்பதில்லை என்ற பெரியாரின் வாக்கினை போல் நானும் அப்படி நடந்துகொள்கிறேன்.
எம்ஜிஆர் வைத்த இலை இப்படி துளிர்க்கும் என அவர் நினைத்திருக்க மாட்டார்.
என் தந்தையிடம் கற்ற மரியாதை காரணமாக தான் இன்றைய கொள்ளையர்களை கூட நான் வைததில்லை (திட்டியதில்லை). இலவசங்கள் அனைத்தும் மக்கள் பணம். நியாயமாக மக்களுக்கு வந்து சேர வேண்டிய பணம். ஏழ்மையை இந்த அரசு பாதுகாத்து வைத்துள்ளது.
நாங்கள் சிறந்த திட்டங்கள் வைத்துள்ளோம். ஏழைகள் தான் ஓட்டு போடுகிறார்கள். பணக்காரர்கள் ஓட்டு போட வருவதில்லை. வந்தாலும் அங்கு நிற்பவர்களை பார்த்து திரும்பி விடுகின்றனர் என்றும், தமிழ்நாட்டை ஒன் ட்ரில்லியன் எகனாமியாக மாற்ற வேண்டியது மக்கள் நீதி மையத்தின் திட்டம்.
அவ்வாறு மாற்ற தேவைப்படுவது நேர்மையான அரசு. சிறு குறு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் நீதி மையம் என்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டிரேட் சென்டர் அமைக்கப்படும். உலக தரத்திலான தொழில் நுட்பம் கொண்டு குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் கொண்டு வரப்படும்.
இதன் மூலம் எரிசக்தி கிடைப்பதோடு குப்பை காடாக இருக்கும் நம்முடைய நகரம் தூய்மையடையும் தேர்தல் என்பது ஓட்டு மட்டும் அல்ல. மாற்றத்தை ஏற்படுத்த நாம் எல்லோரும் கூடி இழுக்க வேண்டிய தேர். தனி மனித சத்தியாகிரகத்தை அனைவருமே செய்ய வேண்டும்.
நல்லவர்களை பார்த்து தாக்கும் நோய் ஊழல். ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் ஊழலை தடுக்க வேண்டியது நமது கடமை. மக்கள் கேட்பது இல்லை என்ற தைரியத்தில் தான் எல்லா தவறுகளையும் செய்து வருகிறார்கள்.
ஊழல் நீங்கியாக வேண்டும். அதை நீக்குவதற்கான தான் அரசியலுக்கு வந்தேன் தொடர்ந்து செயலாற்றுவேன். அரசியல் பிரசுரங்களில் எதுகை மோனையுடன் பேசும் அரசு அல்ல நாங்கள்,நீங்கள் முழு நேர அரசியல்வாதியா என்ற கேள்விக்கு பெரியார் சொன்ன பதில் தான் முழுமையாக யாரும் எதுவும் கிழிப்பதில்லை என்று கூறினார்.
அதுதான் என்னுடைய பதிலும் என்னோடு வந்து நீங்கள் அனைவரும் அரசியலில் குதிக்க வேண்டுமென்றும் அனைத்தையும் விட்டு விட்டு என் பின்னால் வாருங்கள் என்பது மக்கள் நீதி மையத்தின் கொள்கை அல்ல எதோ ஒரு வகையிலான மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய கொள்கை.
எனவேதான் இந்த அரசின் நான் கொள்ளையர்களை முன்வைப்பதில்லை அவர்கள் செய்யும் தொழிலைத் தான் நான் கூறுகிறேன். இதே அரசு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு என்னை துரத்திக் கொண்டு வந்து நடுத்தெருவில் நிறுத்துவதற்கு திட்டம் போட்டது. எனக்கு அன்று உதவியது இந்த திருச்சியில் இருந்த என்னுடைய வீடுதான். எனவே நீங்கள் தமிழகத்தை சீரமைக்க புறப்படுங்கள். நானும் புறப்படுகிறேன்.
அரசின் செயல்பாடுகளையும், திருட்டுதனத்தையும் ஓடி ஒளித்து மறைக்க முடியாது அனைத்தும் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. தட்டுகிற கரங்கள் எல்லாம் முத்திரை வார்க்கும் கரங்களாக மாற வேண்டும் அதற்கான நினைவுறுத்தல் தான் எங்களுடைய பரப்புரை.
ஒவ்வொரு தொழிலும் 30 சதவீத வளர்ச்சி கொடுக்கப்படும். அரசு , அரசு என்று பேசுவது நான் உங்களுடன் அமர்ந்து அரட்டை அடித்து விட்டு செல்ல வரவில்லை நாங்கள் இதை செய்வோம் என்ற நம்பிக்கையில் கூறினேன். மக்கள் நீதி மையம் கைகளுக்குள் எப்படி இணைந்து இருக்கிறதோ அதேபோல் உங்களுடைய கைகளும் இணைந்திருக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
நான் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை உங்களுடைய கைகளைக் கோர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்கிறோம் நல்ல அரசை கொடுப்பதற்காக நாங்கள் இருக்கிறோம் நான் தருகிறேன். இந்த பரப்புரையில் இரண்டு நோய்கள் தாக்காமல் இருக்க கவனம் செலுத்தியுள்ளோம்.
இரண்டுமே கொள்ளை நோய்கள் தான் ஏனென்றால் இது ஒரு குருட்டு வியாதி எல்லோருக்கும் வரும். அதிலும் இந்த அரசின் பிணைந்து உள்ள ஊழல் என்ற நோய் நல்லவர்களை மட்டுமே தாக்கும் என்ன பேசினார்.
அப்போது மாற்றுத்திறனாளி சந்தித்தபின் பேசியபோது … உடல் ஊனமுற்றோரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உடல் ஊனமுற்ற ஒருவரை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவோம் என்றார். இதனைத் தொடர்ந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலையில் பேசியபோது….
மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டனர். அமைச்சர்கள் சேர்த்த கூட்டம் காசு குடுத்து சேர்த்த கூட்டம். ஆனால் இங்கு கூடியிருக்கின்ற கூட்டம் நேர்மையாக தானாக சேர்ந்த கூட்டம். நான் ஒன்றும் சினிமா நட்சத்திரம் அல்ல நான் உங்கள் வீட்டில் வைத்து கொள்ள வேண்டிய சிறிய விளக்கு. இந்த விளக்கு உங்கள் வீட்டில்ற்கும் வெளிச்சைதையும் மாற்றத்தையும் தரும் என பேசினார்.
பின்னர் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பேசியபோது.. .. 55 சதவீதம் பெண்கள் இருப்பதால்தான் தற்போது இவ்வளவு பெண்கள் வந்துள்ளனர். மக்கள் நீதி மையம் கட்சி மாற்றத்திற்கான கட்சி அனைவரும் இணைந்து இருப்போம் என பேசினார். இதனைத்தொடர்ந்து சமயபுரம் டோல்கேட்டில் பேசியபோது…. நேர்மையானவர்கள் கூட்டத்தில் பேசுவதில் எனக்கு பெருமையாக இருக்கிறது.
தமிழகம் ஒரு புரட்சிக்கு தயாராகி விட்டது. அதற்கு இந்த அடையாளமும் இங்கே தெரிகிறது இதற்காக அரை நூற்றாண்டு காத்திருக்கிறோம். தீமையை நோக்கி குத்துங்கள் உங்கள் ஓட்டை விரைவில் எது என்று சொல்கிறேன் நாளை நமதே என பேசினார். அதன்பின்பு திருவெறும்பூரில் இறுதியாகப் பேசிய மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்….. பல இடங்களில் எனக்கு பேச அனுமதி இல்லை.
இருந்தாலும் பல இடங்களில் எனக்கு இதே வரவேற்பு கிடைக்கிறது.சினிமா நட்சத்திரத்தை பார்க்கக் கூடும் கூட்டம் என்று இதை பலர் சொல்கிறார்கள். நான் நட்சத்திரமாக இருந்தது உண்மைதான். இருப்பதும் உண்மைதான். இனி உங்கள் வீட்டு சிறு விளக்காக இருப்பதையே நான் விரும்புகிறேன்.
திருவெறும்பூர் பகுதி சேறும் சகதியுமாக இருக்கிறது. நீங்கள் பதவியில் அமர வைத்தவர்கள் எல்லாம் சொகுசாக வாழ்கிறார்கள். ஏழைகளுக்கான திட்டங்கள் மக்கள் நீதி மய்யத்தில் நிறைய இருக்கிறது. இது பழிபோடும் அரசியல் அல்ல. இதனை ஒரு அரசியல் புரட்சியாக நீங்கள் மாற்றிக் காட்ட வேண்டும். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே.
நிச்சயம் நாளை நமதே. உங்களது குறைகளை கேட்டறிய மீண்டும் வருவேன். எங்களவர்கள் மீண்டும் வருவார்கள். இந்த தலைமுறைக்கு நல்லது ஏற்பட வேண்டும் எங்கு சென்றாலும் மகளிர் கூட்டம் இருப்பது பெரும் நம்பிக்கை இருக்கிறது, பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்ற முடியும். முகக்கவசம் இல்லாமல் தாய்மார்கள் குழந்தையை கூட்டத்திற்கு கூட்டி வர வேண்டாம் என அறிவுரை செய்தார்.
கொரோனா காலத்தில் எதற்காக கூட்டத்தில் போகிறீர்கள் என்று சொன்னார்கள், நான் கூட்டத்திற்கு நடுவில் போகவில்லை குடும்பத்திற்கு நடுவே போகின்றேன். தமிழகத்தை சீரமைக்கும் பணி தொடங்கிவிட்டது மாற்றத்திற்கான விதையை நீங்கள்தான் தூவவேண்டும். அதற்கான தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. என பேசினார் இதனைத் தொடர்ந்து நாளை காலை செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பிரச்சாரத்தில் செல்கிறார்.