சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் நடத்துவது பற்றி இன்று மாலை அறிவிக்கப்படும் – கல்வித்துறை மந்திரி

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் நடத்துவது பற்றி தகவல்களை இன்று மாலை 6 மணிக்கு  கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார் . 

கொரோனா நோய் பரவலால் 2020-2021-ம் கல்வியாண்டின் இயல்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்குபெற முடியாமல் ஆன்லைனில் முடிந்த அளவுக்கு கற்று வருகிறார்கள்.

மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லைஆனால் இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. மாநில பாடத்திட்ட தேர்வுகளுக்கு முன்னதாக சி.பி.எஸ்.. பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.

இதனால் சி.பி.எஸ்.. பொதுத்தேர்வுக்கான தேதியை அந்த மாணவர்கள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மத்திய கல்வித்துறை மந்திரி ரமே‌‌ஷ் பொக்ரியால் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நிலையில், தேர்வு தொடங்கும் தேதிகள் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!