பயங்கரவாதிகள் சதி- சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), default quality

புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பிய எச்சரிக்கை கடிதத்தில், புத்தாண்டு அன்று பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய இடங்களில் போலீசார் நாளை இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

புத்தாண்டு அன்று கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். மக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தலைவர்களின் நினைவு மண்டபங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு முடிந்த பிறகு மேலும் சில நாட்கள் முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மெரினாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வருகிற 2-ந்தேதியில் இருந்து சில நாட்களுக்கு மெரினாவுக்கு மக்கள் அதிகளவில் வர வாய்ப்பு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். அதுபோன்று மக்கள் கூட்டமாக இருக்கும்போது அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய கோவில்களிலும், கிறிஸ்தவ ஆலயங்களிலும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், கோயம்பேடு உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இன்று முதல் போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமாக யாராவது சுற்றி திரிந்தால் அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். மர்மமான முறையில் பொருட்களோ, பைகளோ தென்பட்டால் அதுபற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கோ, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!