தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை – தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை

தமிழகத்தில் கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்கூட்டியே வாய்ப்பு குறைவு. கூடுதல் ஓட்டுச்சாவடிகளை கண்டறியும் பணி நடந்து வருவதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. ஒரு ஓட்டுச்சாவடியில் ஆயிரம் பேர் ஓட்டளிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

67 ஆயிரமாக உள்ள ஓட்டுச்சாவடி மையங்களின் எண்ணிக்கையை 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டம் உள்ளது. இதற்கு தேவைப்படும் கூடுதல் மின்னணு இயந்திரங்களை மராட்டியம் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுஎன்று தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!