மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது செய்யப்பட்டனர். தானேயில் 416 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாநில அரசு தடை விதித்தது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக புத்தாண்டை வரவேற்க தயார் நிலையில் இருந்து வந்த ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் களை இழந்து காணப்பட்டது. இதற்கிடையே போலீசார் மும்பையில் உள்ள முக்கிய சாலைகளில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க தீவிரமாக வாகன சோதனை நடத்தினர்.

இதில் 35 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தானே மாவட்டத்தில் நடத்திய வாகன சோதனையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்ததாக 623 பேர் சிக்கினர்.

இதில் 416 பேர் இயல்புக்கு அதிகமான அளவில் குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் உடன் பயணம் செய்த 207 பேரும் அடங்குவர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 400 பேர் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் எனவும், அதிகபட்சமாக பிவண்டி தாலுகா நார்போலியில் 107 பேர் சிக்கியதாகவும் உதவி போக்குவரத்து போலீஸ் கமிஷனர் பாலசோகப் பாட்டீல் தகவல் தெரிவித்து உள்ளார்.

 

Translate »
error: Content is protected !!