முன்னுரிமை பயனாளிகளுக்கு செலுத்தும் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் உள்ளன – தேசிய நிபுணர் குழு தலைவர் தகவல்

முதல்கட்டத்தில் முன்னுரிமை பயனாளிகள் அனைவருக்கும் செலுத்தும் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது என்று தேசிய நிபுணர் குழு தலைவர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய நிபுணர் குழுவின் தலைவராகநிதி ஆயோக்உறுப்பினர் வி.கே.பால் செயல்பட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியது, 

உயிருக்கு ஆபத்தான நோய்களால் அவதிப்படுபவர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அவர்களுக்கு தேவையான போதிய தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் மேலும் சிலதடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் கிடைத்து விடும். அப்போது, கையிருப்பு அதிகரிக்கும். தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது, வினியோகிப்பது தொடர்பான திட்டத்தைமத்திய அரசு விரைவில்அறிவிக்கும்.

கொரோனாவை ஒழிப்பதுடன், தடுப்பூசி போடுவதை நிறுத்துவதுதான் நமது இலக்கு. அதற்கு நாட்டில் 70 சதவீதம் பேருக்கு ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாக வேண்டும். தடுப்பூசி போடுவதன் மூலமோ அல்லது இயற்கையாக தொற்று உருவானவர்கள் அதிகரிப்பதன் மூலமோ அது உருவாக்கப்படும்.

போதிய அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்கள் இருந்தால்தான் இயல்பு வாழ்க்கை திரும்பும். வயது வந்த பிரிவினருக்கு தடுப்பூசி போட்டு இந்தியாவுக்கு பழக்கம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், சாதாரண தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திய அனுபவம் உள்ளது. குறுகிய காலத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்திய அனுபவம் உள்ளது. அந்த அனுபவங்களை பயன்படுத்தி, கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம்.

 

Translate »
error: Content is protected !!