முறையாக அதிகளவு வாக்காளர்கள் நீக்கம் செய்ததால் தேர்தல் முறையாக நடைபெறுமா – அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை ஆய்வுசெய்யும்வகையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜன்சிங் சவான் தலைமையில் ஆய்வுக்கூட்டம் – முறையாக அதிகளவு வாக்காளர்கள் நீக்கம் செய்ததால் தேர்தல் முறையாக நடைபெறுமா என்ற எண்ணம் ஏற்படுவதாக அரசியல்கட்சியினர் குற்றச்சாட்டு.

சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்றபாடு மற்றும் ஆயத்தப்பணிகளின் ஒருபகுதியாக மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும்பணி நடைபெறும் அதேவேளையில் சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இம்மாத இறுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படஉள்ளது.

இதனிடையே திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளை ஆய்வுசெய்யும்வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜன்சிங் சவான் தலைமையில், மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சிவராசு முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சுருக்கமுறை மேற்கொள்வதில் உள்ள குறைபாடுகள் மற்றும் பல்வேறு கருத்துக்களை பார்வையாளரிடம் தெரிவித்த அரசியல்கட்சியினர் இதனை வாக்காளர் பட்டியல் வெளியிட்டபின்னர் நிவர்த்திசெய்வதாக தெரிவித்தார்.

இதனிடையே திருவெறும்பூர், பெல், ரெயில்வே குடியிருப்பு, செங்குளம்காலணி துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்புபகுதிகளில் அதிகபட்சமாக வாக்காளர்கள் படிவம் 7ஐப் பயன்படுத்தாமல் நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்,

மேலும் அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்ட வாக்காளர் சேர்ப்பு முகாமில் பெறப்பட்ட விபரங்கள் அடங்கிய பட்டியலில் வார்டு குளறுபடிகள் அடங்கிதை வழங்கியுள்ளதால் தேர்தல் முறையாக நடைபெறுமா என்ற எண்ணம் ஏற்படுவதாகவும், வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க ஏதுவாக கொரோனாவால் ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருப்பதை அரசியல்கட்சியினருக்கு ஆலோசனைபெற்று விரைந்து தெரிவிக்கவேண்டும், நியாயமாக தேர்தல் நடைபெறாவிட்டால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவும், சட்டரீதியான நடவடிக்கையில் இறங்கவும் அரசியல் கட்சிகள் தயார் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!