வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டம்.
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை இடைத்தரகள் எனவும் தமிழகத்தில் உள்ள விவசாயிகள்
வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும் பொய் பிரச்சாரங்கள் செய்யப்படுவதை கண்டித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.