இந்தியாவில் பரவி வரும் புதியவகை கோரோனோ பாதிப்பு 82ஆகா உயர்வு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், ஓராண்டை கடந்து உலகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கிடையே, இங்கிலாந்தில், உருமாறிய நிலையில் புதியவகை கொரோனா உருவானது. அங்கிருந்து வந்தவர்கள் மூலம் இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி விட்டது. இதனால் இங்கிலாந்துக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 8-ந் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது.

சர்வதேச விமானங்களில் வந்து சேரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கு புதியவகை கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்களின் மாதிரிகள், 10 அரசு பரிசோதனை மையங்களில் பரிசோதிக்கப்படுகிறது. இந்த நிலையில்இன்று மேலும் 11 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் புதியவகை கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

 

Translate »
error: Content is protected !!