குஜராத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகள் இன்று துவக்கம்

குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காக பள்ளி கூடங்கள் இன்று திறக்கப்பட்டு உள்ளன.

    ராஜ்கோட்,

நாட்டில் சமீப காலங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறதுஇந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளி கூடங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் 10, 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காக இன்று பள்ளி கூடங்கள் திறக்கப்படுகின்றனபள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முக கவசம் அணிந்து, கைகளை தூய்மைப்படுத்தி, வெப்ப பரிசோதனை செய்த பின்னர் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்அவர்களுக்காக உள்ள வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக வகுப்புகளுக்கு சென்றனர்

வகுப்பறையிலும் சமூக இடைவெளி விட்டு, அமர வைக்கப்பட்டு வருகின்றனர். இதுபற்றி ஆமதாபாத் நகரில் உள்ள பள்ளி இயக்குனர் ஒருவர் கூறும்பொழுது, கடந்த 10 மாதங்களுக்கு பின் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். நாங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா 10 மாணவர்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தி பிரித்து உள்ளோம்கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!