குஜராத் அருகே நடைபாதையில் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் 15 பேர் பலி

அகமதாபாத்,

குஜராத்தின் சூரத்தில் ஒரு லாரி மேலே ஏறியதில் ராஜஸ்தானைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் இன்று அதிகாலை உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் கோசம்பா நகரில் நடந்துள்ளது. கிம் சார் ரஸ்தாவில் உள்ள ஒரு நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த 18 பேரின் மேல் இந்த லாரி ஏறியதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பின்னர் இருவர் இறந்தனர்.

மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் ராஜஸ்தானின் பன்ஸ்வாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குஜராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கரும்பு ஏற்றப்பட்ட டிராக்டரில் ஒரு லாரி மோதியது, அதன் பின்னர் லாரியின் ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் தூங்கிக்கொண்டிருந்த நடைபாதைக்கு மேல் அதை ஓட்டிச் சென்றார்என்று சூரத் கம்ரேஜ் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சி.எம்.ஜடேஜா தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி சூரத்தில் நடந்த உயிர் இழப்பு சோகமானது என்றார். “என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன.

காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறினார். சூரத்தில் நடந்த விபத்து காரணமாக உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 2. லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். இதே போல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த சம்பவம் குறித்து தாம் மிகவும் வருத்தப்படுவதாகவும் கூறி உள்ளார்.

 

Translate »
error: Content is protected !!