நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிகளுக்குக்கான உணவு மானியம் நீக்கம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு மானியம் முற்றிலும் நீக்கப்பட்டுஉள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார் 

இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 29-ஆம் தேதி தொடங்குகிறதுமாநிலங்களவை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறும். மக்களவை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் , மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த  மக்களவை, சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்த முறை கேள்வி நேரம் மற்றும் பூஜ்ஜியம் நேரம் உண்டு என கூறிய அவர், கேள்வி நேரம் ஒரு மணிநேரம் இருக்கும் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஜனவரி 27 ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Translate »
error: Content is protected !!