காங்கிரஸ் புதிய தலைவர் யார்? காரிய கமிட்டி கூட்டத்தில் நாளை ஆலோசனை

காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து காரிய கமிட்டி கூட்டத்தில் நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது.

புதுடெல்லி,யார் 

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அப்போது கட்சி தலைவராக இருந்த ராகுல்காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து, இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவர் ஒன்றரை ஆண்டாக இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். எனவே, கட்சி துடிப்புடன் செயல்பட முழுநேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும், உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று குலாம்நபி ஆசாத், கபில் சிபல் உள்பட 23 மூத்த தலைவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.

அதைத்தொடர்ந்து, உட்கட்சி தேர்தலும், கட்சி தலைவர் தேர்தலும் நடத்துமாறு சோனியா காந்தி, நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். அத்துடன், கடிதம் எழுதிய தலைவர்களை கடந்த மாதம் சோனியா அழைத்து பேசினார்.

மதுசூதன் மிஸ்திரி தலைமையிலான காங்கிரசின் தேர்தல் பிரிவு, புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து சமீபத்தில் தனது சிபாரிசுகளை அளித்தது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியில் முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் நடக்கும் கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார்.

அதில், கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், உட்கட்சி தேர்தல்கள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி, தேர்தல் கால அட்டவணை இறுதி செய்யப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடத்துவதற்கான தேதியும் இறுதி செய்யப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!