குடியரசு தினவிழா -விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாடு முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து விமானநிலையங்களிலும்  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம், கொச்சி விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டது.இதனைத்தொடர்ந்து கொச்சி விமான நிலையம் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி உள்ள சாலைகள், மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படுகின்றன. இங்கு வந்து போகும் அனைவரையும் தனித்தனியாக கண்காணிக்கும் விதத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அனைத்து பாதுகாப்பு படை வீரர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் பாதுகாப்பு படை முதுநிலை கமாண்டர் ஹெச்.பாண்டே தெரிவித்துள்ளார். இங்கு மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு நிபுணர்களின் பிரிவு, ரகசிய புலனாய்வு விசாரணை பிரிவு மற்றும் கூடுதல் தொழிற் பாதுகாப்பு படையினர் ஆகியோர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!