குடியரசு தினத்தையொட்டி, முன்னாள் குடியரசுத்தலைவர் நினைவிடம் மின்னொளியில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
சுதந்திர இந்தியாவின் 72 வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொரானா விதிமுறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நினைவிடம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
ராமேஸ்வரத்தில் 1931 அக்.15ல் பிறந்த ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் , விஞ்ஞானியாக உயர்ந்தார்.அக்னி நாயகனான அவர் திறமையை பாராட்டி நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கலாம் , தனது எளிமையால் மக்கள் ஜனாதிபதி என்றழைக்கப்பட்டார். மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். இந்நிலையில் 2015 ஜூலை 27 ல் அவர் மறைந்தார்.
ராமேஸ்வரம் அருகே பேக்கரும் வில் உருவாக்கப்பட்ட கலாம் நினைவிடத்தை பிரதமர் மோடி 2017 ஜூலை 27 ல் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் கலாம் நினைவிடத்தை பார்வையிட்டு வந்த நிலையில், கொரானா ஊரடங்கு உத்தரவையடுத்து மார்ச் இறுதி வாரம் மூடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது,அவரது நினைவிடம் மின்னொளியில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.