இந்தியாவில் 70% கொரோனா பாதிப்புகள் மராட்டியம் மற்றும் கேரளாவில் உள்ளன என மத்திய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் கொரோனா பாதிப்புகள் பற்றி மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்தியாவில் 70% கொரோனா பாதிப்புகள் மராட்டியம் மற்றும் கேரளாவில் உள்ளன. இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த உருமாறிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இதுவரை 153 ஆக உள்ளது என கூறியுள்ளார்.
கடந்த 7 நாட்களாக நாட்டில் 147 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை. கடந்த 14 நாட்களாக 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை. கடந்த 21 நாட்களாக 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை. கடந்த 28 நாட்களாக 21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.