“இந்தியாவின் ஒளி மிகுந்த எதிர்காலத்திற்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வழிவகுக்கும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் தயாராகவுள்ளதாகவும், கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற, உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 2021-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற, உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

‘‘இந்தியாவின் ஒளி மிகுந்த எதிர்காலத்திற்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வழிவகுக்கும். இதை மனதில் வைத்து இந்த கூட்டத்தொடரில் விவாதங்கள் இருக்க வேண்டும். தேசமும் இதைதான் எதிர்பார்க்கிறதுஎன்றார்.

இந்தியாவின் வரலாற்றில், 2020ம் ஆண்டில், பல்வேறு சலுகைகள் வாயிலாக 5 மினி பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார். அந்த மினி பட்ஜெட்டை ஒரு அங்கமாக இந்த பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன். பார்லிமென்டில், விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும். கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்கும் வகையில் எம்.பி.,க்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

 

Translate »
error: Content is protected !!