எதிர்ப்பார்த்ததை விட விரைவாக தடுப்பூசி அனுப்பி வைத்த இந்தியாவுக்கு நன்றி: இலங்கை அமைச்சர் – சுதர்ஷினி;
இலங்கை எதிர்பார்த்ததை விட விரைவாக கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ மருத்துவமனையில் இன்று (29) இடம்பெற்ற கொரோனா தடுப்பூசி வழங்கும் முதலாவது நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களை சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், தேசிய தடுப்பூசி திட்டத்தினை எதிர்வரும் பிப்பவரி அல்லது மார்ச் மாதமளவில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்பார்த்ததை விட விரைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மேல் மாகாணத்தின் ஆறு வைத்திய சாலைகளில் இன்று ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், முப்படையினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். மேலும், தடுப்பூசியினை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியதற்காக இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றிகள் மற்றும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.
#Great Job
#India