நாடு முழுவதும் இன்று ஐஐடி கேட் தேர்வு ஆரம்பம்

நாடு முழுவதும் இன்று ஐஐடி கேட் தேர்வு ஆரம்பம்..! சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்

நாடு முழுவதும் இன்று தொடங்க உள்ள ஐஐடி கேட் (GATE) தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். எம்.., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதுஇயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 27 பாடப் பிரிவுகளில் சேர்வதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் 2021- 22ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து 14ந் தேதி வரை பாடப் பிரிவு வாரியாகத் தேர்வுகள் நடக்க உள்ளன. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தேர்வர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!