விவசாயிகள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து ராகுல்காந்தியுடன் 10 எதிர்க்கட்சியினர் ஆலோசனை
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க சிவசேனா, திமுக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தலைமையில் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தை மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இடதுசாரி அணிகள் இடம் பெற்ற கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் சுமார் 15 மணி நேரம் விவாதம் நடத்த மத்திய அரசு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள போதும் குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்திற்குப் பிறகே அதனை நடத்த வேண்டும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். இதனை எதிர்க்கட்சியினர் ஏற்காமல் மக்களவையிலும் தனி நேரம் ஒதுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.