நாடு முழுவதும் இன்று “சக்கா ஜாம்” சாலை மறியல் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் (‘சக்கா ஜாம்‘) சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

புதிய வேளாண் சட்டங் களுக்கு எதிராக விவசாயிகள் நாட்டின் பிற பகுதிகளிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற பெயரில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்து இருந்த நிலையில், நாடு முழுவதும் விவசாயிகள்சக்கா ஜாம்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 ‘சக்கா ஜாம்அழைப்பின் ஒரு பகுதியாக ஷாஜகான்பூர் எல்லைக்கு (ராஜஸ்தான்அரியானா) அருகே தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாபில், அமிர்தசரஸ் மற்றும் மொஹாலியின் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்பெங்களூருவில்சக்கா ஜாம்இன் ஒரு பகுதியாக விவசாய சட்டங்களுக்கு எதிராக யெலஹங்கா காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஜம்மு காஷ்மீரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். டெல்லியின் எல்லைகளில் போராட்டம் செய்யும் விவசாயிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று கூறினர்.

அரியானாவில் பல்வாலுக்கு அருகிலுள்ள அதோகன் சவுக்கில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரியில்  “ஜக்கா ஜாம்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

 

Translate »
error: Content is protected !!