டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது

விவசாயிகள் குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை டில்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்தனர்.

குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. விவசாயிகள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். பலர் செங்கோட்டைக்குள் நுழைந்து மதக் கொடிகளையும், பிற கொடிகளையும் ஏற்றினர். அன்று பிரதமர் தேசிய கொடியேற்ற இருந்த நேரத்தில் இந்த சம்பவங்கள் நடந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வன்முறை சம்பவத்தில் நடிகர் தீப் சித்து உள்பட சிலர் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது. அவர்கள் தான் போராட்டக்காரர்களை போலீசார் அனுமதிக்காத பாதையில் செல்ல தூண்டியதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து தீப் சித்து மீது வழக்கு பதிவு செய்த டில்லி காவல்துறை அவரை பற்றி தகவல் சொன்னால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவித்தது. அதேபோல குற்றம்சாட்டப்பட்ட பூடாசிங், சுக்தேவ் சிங் மற்றும் 2 பேர் குறித்து தகவல் அளிப்போருக்கு தலா 50 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் தீப் சித்துவை டில்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

விவசாய பேரணி வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டது தொடர்பாக நடிகர் தீப் சித்து கடந்த ஜனவரி 31ம் தேதி தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சில மணி நேரங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவில் ‘‘நான் என் வாழ்க்கையை விட்டுவிட்டு பஞ்சாப் விவசாயிகளுக்காக குரல் கொடுக்க போராட்டக்களத்திற்கு வந்தேன். ஆனால் என்னை துரோகி என முத்திரைக் குத்தியுள்ளனர்’’ என சாடியிருந்தார்.

 

Translate »
error: Content is protected !!