மேற்கு வங்கத்தில் காவல்துறையினரின் அராஜகத்தைக் கண்டித்து 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம்

மேற்கு வங்கத்தில் காவல்துறையினரின் அராஜகத்தைக் கண்டித்து 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில்  போலீசாரின்  அராஜகத்தைக் கண்டித்து 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகள் அழைப்பு விடுத்து இருந்தன. இதன்படி, அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ரு வருகிறது.

மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை கணிசமாக பாதிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளின் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சட்டசபை நோக்கி நேற்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது.

போலீசார் நடத்திய தடியடியில் ஏராளமானோர் காயமடைந்தனர். போராட்டக்குழுவினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்தன

 

 

Translate »
error: Content is protected !!