ஜப்பானின் வடக்குபுறம் உள்ள புகுஷிமோ நகர் கடற்பகுதியில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் அதிர்வு 7 புள்ளி 4 ஆக பதிவான நிலையில், சுமார் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக ஒரு மீட்டர் தூரம் வரை சுனாமி அலைகள் எழும்பியுள்ளன.
மேலும் கட்டிடங்களில் அதிர்வு உணரப்பட்டு, மரசாமான்கள் பல சேதமடைந்தன. சாலையில் மின்கம்பங்களும் பெயர்ந்து விழுந்ததோடு, சிரோஷியில் புல்லட் ரயில் தடம் புரண்டது. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து உரையாற்றிய பிரதமர் பியூமியோ கிஷிடா, நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 90க்கு மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்ததாகவும் தெரிவித்தார்.