ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயம் – தமிழ்நாடு அரசு

முதியோர் ஓய்வூதிய திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் ஓய்வூதியம் ரூ.1000 பெற ஆதாரை கட்டாயமாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. 50 வயதை தாண்டியவர்கள், திருமணம் ஆகாத ஏழை பெண்களுக்கு தமிழ்நாடு அரசு மூலமாக ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

இந்திராகாந்தி தேசிய ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 8 ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

 

இந்த திட்டத்தின் பயன்பெறக்கூடிய பயனாளிகள் அனைவருக்கும் ஆதார் கட்டாயம் என தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், ஆதார் எண் கிடைக்கும் வரை மாற்று ஆவணங்களை பயன்படுத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது

 

 

Translate »
error: Content is protected !!