சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களாக ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி என்ற பெண் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்து ரவுடி பேபியின் மீது புகார் மனு அளித்துள்ளனர்.
சில பிரபலங்களுடன் புகைப்படம் வைத்துக்கொண்டும் தனக்கு ஆள் பலம் அரசியல் பலம் இருப்பதாகக் கூறிக்கொண்டும் ரவுடி பேபி பல பெண்களை மிரட்டி வருவதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கமிஷனர் அலுவலகம் வந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் செய்தியாளர்களிடம் கூறினார்கள்.