தமிழகத்தில் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்துவது மற்றும் சுகாதாரத்துறையின் புதிய அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்தும் சுகாதாரத்துறை ஆலோசனை நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், தேசிய நலவாழ்வு குழும இயக்குனரகத்தில் தமிழகத்தில் உள்ள 36 அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இயக்குனர்களுடன் இன்றும் நாளையும் ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மருத்துவமனைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும், சிடி, எம்ஆர்ஐ பரிசோதனை மையங்களின் செயல்பாடுகள், ரத்த வங்கிகளின் செயல்பாடுகள், சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில் அறித்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், அதற்கான நிதி சார்ந்தும், மருந்துகள் கையிருப்பு, 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, பரிசோதனை கூடங்கள் அமைப்பது, கொரோனா 3ம் அலை, டெங்கு, மழைக்கால நோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கண்தான வங்கியின் செயல்பாடுகள், தற்கொலை தடுப்பதற்கான மனநல ஆலோசனை, நீட் தேர்வினால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் ஆலோசனை மையம், மக்களைத்தேடி மருத்துவம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் தாரேஷ் அகமது, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.