மீண்டும் ‘மிக மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மிக மோசம் என்ற நிலையை எட்டியுள்ளது. தலைநகரில் குளிர்காலம் துவங்கியதிலிருந்து காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.

அதிகப்படியான காற்று வீசாதது, கட்டுமான பணிகள் மற்றும் வாகன பயன்பாடு அதிகரித்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் சற்று முன்னேற்றம் அடைந்த காற்றின் தரம் இன்று, மீண்டும் மிக மோசம் நிலையை அடைந்திருப்பதாக சஃபார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அதிகாலை பனியுடன் காற்று மாசு துகள்களும் படிந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தநிலையில் பொதுமக்கள் முடிந்தவரை   வெளியே செல்வதை தவிர்க்கவும், அவ்வாறு செல்வோர் அத்தியாவசிய மருந்துகளை கையில் வைத்துக்கொள்ளவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!