டிச-7ல் அதிமுக உட்கட்சி தேர்தல்

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல், டிசம்பர் 7ஆம் தேதி நடத்தப்பட்டு, 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிவு – 2ன்படி “கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்” என்ற விதிமுறைக்கேற்ப, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணையாளர்கள்:

பொன்னையன் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

பொள்ளாச்சி வி. ஜெயராமன், எம்.எல்.ஏ கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

வேட்பு மனு தாக்கல்:

3.12.2021 வெள்ளிக் கிழமை முதல் 4.12.2021 சனிக் கிழமை (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை).

வேட்பு மனு பரிசீலனை:

5.12.2021- ஞாயிற்றுக் கிழமை காலை 11.25 மணி

வேட்பு மனு திரும்பப் பெறுதல்

6.12.2021 திங்கட் கிழமை மாலை 4 மணி வரை.

தேர்தல் நாள்:

7.12.2021- செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு

8.12.2021 புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!