ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 7 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 7 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக நிறுவனத்தின் கப்பலான Rwabee கப்பலில் இருந்த 7 இந்தியர்கள் உட்பட 11 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றுள்ளனர். ஏமன் நாட்டில் உள்ள Hodeidah துறைமுகம் அருகே கடந்த 2ம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கப்பல் கடத்தப்பட்டது.

7 இந்தியர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!