வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக 6 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பல மாதங்கள் தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்ததால் அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை சந்திப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு நிதி ஒதுக்குமாறு முதன்மை வனப்பாதுகாவலர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக 6 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.