கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல், கலை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.
தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடையும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இதற்கிடையில், அரியர் தேர்வுகள் எப்படி நடக்கும் என்பதில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில், அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்’ என அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்தார். தமிழகம் முழுவதும் மொத்தம் 20 லட்சத்து 879 மாணவர்கள் ஆன்லைன் செமஸ்டர் தேர்வை எழுத உள்ளனர்.