திருத்தணி முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா துவக்கம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் கோட்டா ஆறுமுக சுவாமி ஆகிய கோவில்களில் இன்று கந்த சஷ்டி விழா துவங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள் ஆன இன்று முதல் கந்த சஷ்டி விழா, 6 நாட்கள் நடைபெறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் உள்ளதால் கட்டுப்பாடுகள் விளக்கிக் கொள்ளப்பட்டு அந்த, இந்தாண்டிற்கான கந்த சஷ்டி விழா, இன்று காலை துவங்குகிறது. காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

தொடர்ந்து, காலை, 10:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை காவடி மண்டபத்தில், உற்சவருக்கு லட்சார்ச்சனை விழா நடைபெற்று வருகிறது. நாளை, மூலவருக்கு பட்டு, 28ஆம் தேதி தங்ககவசம், 29ஆம் தேதி திருவாபரணம், 30ம் தேதி சந்தன காப்பு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. இம்மாதம், 30ஆம் தேதி காலை 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை லட்சார்ச்சனையும், மாலையில் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும், 31ஆம் தேதி நண்பகலில் உற்சவர் திருக்கல்யாணமும் நடக்கிறது.

கந்த சஷ்டி விழாவில் ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும், ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும் குறிப்பிடதக்கது. அதே போல் திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான ஸ்ரீகோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா, இன்று முதல் துவங்கி வரும்,31ஆம் தேதி வரை நடக்கிறது. தினமும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடத்தப்படுகிறது. இக்கோவிலில், இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!