ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை

ஆங் சாங் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து மக்களுக்காகப் போராடி வரும் ஆங் சாங் சூகி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது மியான்மர் ராணுவம் கொரோனா விதிமீறல், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கியை இறக்குமதி செய்து விற்பனை செய்தல் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதுதொடர்பான வழக்கில் டிசம்பர் மாதம் அவருக்கு ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு  பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Translate »
error: Content is protected !!