டி20 உலகக்கோப்பையின் 26வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மெல்போர்னில் விளையாட இருந்த நிலையில் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே மைதானத்தில் நடக்க இருந்த ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.