குழந்தைத் திருமணம் பற்றி விழிப்புணர்வு தேவை

குழந்தைத் திருமணம் பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவியருக்கு ஏற்படுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 290 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி குறித்த அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் இளவயது கருத்தரிப்பு அதிகளவில் நடைபெற்று வந்த நிலையில், துறை சார்ந்து எடுக்கப்பட்ட விழிப்புணர்வு காரணமாக அது குறைந்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!