சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை, ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக, 2020 மார்ச் 23 முதல் சர்வதேச பயணியர் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு சர்வதேச பயணியர் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து இம்மாதம், 15ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச பயணியர் விமான சேவை துவங்கும் என,அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘ஒமைக்ரான்’ கொரோனா பரவல் காரணமாக, விமான சேவையை துவக்குவது தள்ளி வைக்கப்படுவதாக, கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,சர்வதேச பயணியர் விமான சேவைக்கான தடை, அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எனினும், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 32 நாடுகளுக்கான சிறப்பு விமான சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.