வாத்து, கோழிகள் கொண்டு வர தடை

தேனி மாவட்டத்திற்குள் கேரளாவிலிருந்து வாத்து, கோழிகள் உள்ளிட்டவற்றை கொண்டு வர மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தடைவிதித்துள்ளார். கேரளாவிலிருந்து தேனி வழியாக மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு  கோழி உள்ளிட்டவற்றை கொண்டு செல்வது வழக்கம். அனால், தற்போது ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள வாத்து, கோழி உள்ளிட்டவை அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!