பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதாவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29 முதல் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று பெண்களின் வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பி பரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் வலியுறுத்தியது. இதையடுத்து நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மசோதாவை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது