அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு கருப்பின பெண் நீதிபதி

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக, முதன்முறையாக கருப்பினத்தை சேர்ந்த பெண் நீதிபதி கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபரானால் கருப்பினத்தவருக்கே உச்ச நீதிமன்ற நீதிபதி வாய்ப்பு என்று தேர்தலின்போது ஜோ பைடன் வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில் கேதன்ஜியை நியமித்துள்ளார். தேசத்தின் முழுத் திறமை மற்றும் மகத்துவத்தை பிரதிபலிக்கும் நீதிமன்றத்தை வைத்திருக்க வேண்டிய நேரம் இது என்று பைடன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் 115 பேர் நீதிபதிகளாக பணியாற்றியுள்ள நிலையில் கருப்பினத்தைச் சேர்ந்த இரு ஆண் நீதிபதிகள் மட்டுமே இதுவரை பொறுப்பில் இருந்துள்ளனர். தற்போது முதல் கருப்பினப் பெண் நீதிபதியாக பதவி ஏற்க உள்ள கேதன்ஜி தனது வாழ்நாள் முழுவதும் அல்லது ராஜினாமா செய்யும் வரை நீதிபதியாக பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!