செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது:-
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ‘இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் இனி தமிழகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும். தமிழகத்தில் இதுவரை 92,522 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 4.42 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி பெற தகுதி பெற்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு அதிக அளவில் மக்கள் ஊருக்கு சென்றதால், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்குமா என்பதை இன்னும் இரண்டு நாட்களில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மருத்துவ கலந்தாய்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், முடிவு தெரிந்தவுடன் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.