பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கான பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள கோவின் செயலி மூலம் முன்பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கும் நிலையில், ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வழிமுறைகளின்படி, பயனர்கள் ஏற்கனவே 2 டோஸ் என்ன தடுப்பூசி செலுத்திக் செலுத்திக் கொண்டார்களோ, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் அதே தடுப்பூசியை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!