ஒமிக்ரான் அனைவரையும் தாக்கும் எனவும் பூஸ்டர் டோசால் எந்த பயணும் இல்லை எனவும் மருத்துவ நிபுணர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைவரும் ஒமிக்ரான் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க முடியாது எனவும் பூஸ்டர் டோஸ் இதன் பரவலை தடுக்க உதவாது எனவும் மருத்துவர் ஜெய்பிரகாஷ் முலியில் தெரிவித்துள்ளார். மேலும் ஒமிக்ரான் தொற்று குறைந்த வீரியத்தன்மை கொண்டிருப்பதாகவும், இதனால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய ஆபத்து குறைவே எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 80 சதவீதத்தினர் நாம் கொரோனா தொற்றுக்கு ஆளானோம் என்பதை அறியாமலேயே பாதிப்புக்கு உள்ளாகி பின் குணமாவதாகவும் தெரிவித்துள்ளார்…